பாலா தமிழ் கடவுள்
கவி தூறல்கள்
சூட்டுடம்பு
உடலுஷ்ண ங்கொண்டவனோ வாழ்நாள் முழுதும்
கடல்நஷ்ட ங்காணாத நீர்ப்போ லாங்கே
குடல்கஷ்ட ங்கொண்டு முகபோலிவு ங்கெட்டு
மடல்நஷ்ட ங்கண்ட கரிமலர்போ லாவான்
பக்கம் வந்து பாவை நீ
வெக்கையெனும் வேதனை தான்
வித விதமா
வந்தாலும்
துக்கமென்னும் துயரம் தான்
துடி துடிக்க
வச்சாலும்
பல்வரிசை
காட்டி நின்னா
வெக்கத்தில் அவையாவும்
வெயில்கண்ட பனியாகும்
Subscribe to:
Posts (Atom)