Showing posts with label தத்துவ கவிதை. Show all posts
Showing posts with label தத்துவ கவிதை. Show all posts

வீட்டுச்சுமை

வீடு சுமையென்றவனின் காலடியில் 
சுமையில்லை என்று நகர்ந்தது 
நத்தை வீட்டை சுமந்தபடி...


சூட்டுடம்பு


உடலுஷ்ண ங்கொண்டவனோ வாழ்நாள் முழுதும்
கடல்நஷ்ட ங்காணாத நீர்ப்போ லாங்கே
குடல்கஷ்ட ங்கொண்டு முகபோலிவு ங்கெட்டு
மடல்நஷ்ட ங்கண்ட கரிமலர்போ லாவான்



தீக்குச்சி அறியாமை


வெளிவந்தால் எறிந்துவிடுவோம் என்ற பயத்தில் தான் தீக்குச்சிகள் தீப்பெட்டிக்குள்
ஒளிந்து கொண்டு இருக்கிறது
வெளிவந்தால் எறிந்துவிடலாம் என்ற அறியாமையால்.

-பாலா தமிழ் கடவுள்

விழி சிறை


சுதந்திரமான விசால பார்வையில்
விழிகளுக்குள் விரியும் காட்சியவும்
சிறையாகிறது.

-பாலா தமிழ் கடவுள்

பார்வையின் கவனம்


உன் பார்வை கவனமானது என்றால்
காற்றின் அலைகள் மட்டும் அல்ல
நிறமும் கண்ணுக்கு தெரியும்

-பாலா தமிழ் கடவுள்

துன்ப முள்


முள் குத்தாதவரை
  கால்கள் செருப்பை தேடுவது இல்லை.
துன்பம் வராதவரை
  மனிதன் கடவுளை நாடுவது இல்லை

-பாலா தமிழ் கடவுள்

ஒற்றை கண் ஊசி


ஒற்றை கண் ஊசியில் நூல் நுழைக்க,
ஒற்றை கண் பார்வையே உதவி செய்யும்.

-பாலா தமிழ் கடவுள்

இக்கரைக்கு அக்கரை பச்சை

மனதில் உள்ள இச்சைக்கு போடடா கச்சை
நீ வாழும் இடத்திலும் இருக்குமட பச்சை
வார்த்தையில் வைக்காத என்றும் கொச்சை
ஒருநாளது வெளிப்படுத்தும் உன்வாழ்வில் நச்சை

ஆசை எண்ணத்தின் பின்னே ஓடாதே
அது நடக்கவில்லை என்பதால் வாடாதே
அன்பில் கெட்டவர் சொல் நாடாதே
அது நம்வாழ்வில் நற்புகழ் பாடாதே

உனது வாழ்க்கையில் உள்ளதா திண்ணம்
என்பதை சோதிப்பது இறைவன் எண்ணம்
நல்லவனென்றால் நா தொடும் அண்ணம்
உன் வாழ்க்கையும் மாறும் பல வண்ணம்

உன் சிந்தனையில் தினமும் இறைவை
உன்வாழ்வு அடையும் விரைவில் நிறைவை
மதித்திடு நம் சுற்றத்தின் உறவை
மனம் அடையாது என்றும் பிரிவை

நல்லோரை படித்தால் நல்லது பிறக்கும்
பெற்றோரை பணிந்தால் நல்வாழ்வு சிறக்கும்
எளியோருக்கு உதவினால் இன்பமது நிறக்கும்
ஏழைமனம் கொண்டால் உன் அகவிழி திறக்கும்

இருக்குமிடத்தில் பிழைக்க தெரிவதில்லை
சென்ற இடத்திலும் மனமோ நிலைப்பதில்லை
எந்நாளும் இக்கரைக்கு அக்கரை பச்சையில்லை
மனம் போனபோக்கில் வாழ்ந்த வாழ்வு உச்சமில்லை...


-பாலா தமிழ் கடவுள்