Showing posts with label புதுக்கவிதை. Show all posts
Showing posts with label புதுக்கவிதை. Show all posts
எப்படி வருகிறாய்
என் வீட்டு கதவும் மூடித்தான் இருக்கிறது
என் விழியின் இமையும் மூடித்தான் இருக்கிறது
இருந்தும் எப்படி வருகிறாய் என் கனவில்
நீ...
தீக்குச்சி அறியாமை
வெளிவந்தால் எறிந்துவிடுவோம் என்ற
பயத்தில் தான் தீக்குச்சிகள் தீப்பெட்டிக்குள்
ஒளிந்து கொண்டு இருக்கிறது
வெளிவந்தால் எறிந்துவிடலாம் என்ற
அறியாமையால்.
-பாலா தமிழ் கடவுள்
மூக்கும் காவலனும்
பூக்களின் மனங்களை கொள்ளையடித்து
வரும்
காற்றை சிறைபிடிக்கும் மூக்கு
காவலர் போல (பணம்)மனம் வாங்கி
காற்றை(கள்வனை) விடுவிக்கிறது...
-பாலா தமிழ் கடவுள்
ஊது வர்த்தி
ஒற்றைக்காலில் தவம் செய்யும்
கருநிற பெண்ணின்
வெண்ணிற கூந்தல்
வானோக்கி பறப்பது அதிசயமே…
-பாலா தமிழ் கடவுள்
எறும்பின் பயணம்
ரோடு அகலம் என்பதால்
ரோட்டின் நடுவே எறும்புகள்
ஊர்ந்து பயணிப்பது இல்லை
-பாலா தமிழ் கடவுள்
அன்றும் இன்றும்
அடுப்பில் வைத்த பால் பொங்கி
அடுப்பை அணைப்பது அன்று
அடுப்பில் வைத்து பால் விசிலடித்து
அணைக்க அழைப்பது இன்று
-பாலா தமிழ் கடவுள்
வெள்ளரிக்கு ஆயிரங்கண்
வெயில் பொழியும் வேளையிலே
வெள்ளரி கீறிவிக்கும்
வெற்பம்மா கிழவிக்கிட்ட
விலை குறைச்சு வாங்கி வந்த
வெள்ளரிக்கு ஆயிரங்கண்
-பாலா தமிழ் கடவுள்
குழந்தை இல்லாதவள்
எங்கோ அழும் குழந்தை குரல் கேட்டு
தடவி கொடுத்தாள் தன் அடிவயிற்றை
குழந்தை இல்லாதவள்
-பாலா தமிழ் கடவுள்
இரண்டு அடி
ஒழுங்காய் இரு என்று
"இரண்டு
அடி" கொடுப்பதில்
அம்மாவை மிஞ்சி
விடுகிறான்
வள்ளுவன்
-பாலா தமிழ் கடவுள்
பெண்மானம் காத்திருப்போம்
அன்று நாம் அம்மணமாய் திரிந்த
-பாலா தமிழ் கடவுள்
அம்மனம் இருந்திருந்தால்,
பெண்மனம் புரிந்துதிருப்போம்.
பெண்மானம் காத்திருப்போம்.
-பாலா தமிழ் கடவுள்
பெட்டின் மீது மெட்டு
பெட்டின் மீது மெட்டு,
***போட்டது ஒருப்பாட்டு.
அது பத்து மாதம் கழித்து,
***கேட்டது தாலாட்டு.
இனி உனக்கு எனக்கு இல்லை,
***காதல் விளையாட்டு.
காரணம் நாம் வரைந்த,
***கவியோவிய குறும்பாட்டு...
அது பத்து மாதம் கழித்து,
***கேட்டது தாலாட்டு.
இனி உனக்கு எனக்கு இல்லை,
***காதல் விளையாட்டு.
காரணம் நாம் வரைந்த,
***கவியோவிய குறும்பாட்டு...
-பாலா தமிழ் கடவுள்
அம்மாவின் நினைவு
அட்டவணையில் வரும்
-பாலா தமிழ் கடவுள்
அயல்நாட்டு உணவு
உண்ணும்போது
கண்ணீர் துடைத்தது
அம்மாவின் நினைவு
-பாலா தமிழ் கடவுள்
Subscribe to:
Posts (Atom)