மாலை வேளையில் மயக்கம் கொண்டேன்
மங்கை உன்னை நினைத்துகொண்டேன்.
மதி நிறைய போதை கொண்டேன்
இனி சிறுகனம் தாங்காது
என்மனம் என்றுணர்த்து
பதுமை அவளை பார்க்க விரைந்தேன்
கார்ஓடைதனில் மிதக்கின்ற நிலவாக
வைகறை ஓடைதனில் வஞ்சி அவள் மிதக்க கண்டேன்
வின் மீன் தீண்ட நிலவை போல் அவள்..
ஓடை மீன் முழுதும் ஒய்யாரமாய் வட்டமிட்டதேயன்று
அவளை தீண்ட வில்லை..
பனி மலர் தாங்கும் புற்கள் அசைந்தாடும் குலுங்கள் கண்டேன்
என் பெண்மான் அவள் வரும் பவனி கண்டு..
என் விழி பார்த்ததினால் ஏனோ தோகை சேலை மூடிக்கொண்டால்,
மன்னன் அவன் மோகம்தனில் திளைத்தான் என்று..
அவள்,
பொழுதும் கழிந்தது என் பணியும் நிறைந்தது
மாலை தென்றல் வாசம் எனோ, என் மனதை தீண்டியது..
நேரம் தாழ்த்தாது வைகறை வந்தேன் வீசும்
தென்றலினால் ஒரு குளியலும் கொண்டேன்.
கன்னி அவள் காத்திருப்பு அறிந்தும் கால தாமதம் ஏனோ
காலம் அது கலியட்டும் கன்னி அவள் கனியட்டும் என்றோ !
என்றால்,
காளை என் வேலை அறிந்தும் கன்னி வினா சரியன்றோ !
மாலை மங்கும் வேலை இதில் பதில் சொல்வதுதான் முறையோ !
என்றேன்,
நாணம் கொண்ட என்னவளோ சிருநகை கொண்டு பூத்துநின்றால்.
தலைகீழான இரு வினைதனில் தனை மறந்து கை தடம் பதித்தேன்
தளிர்மலர் தயங்காமல் தள்ளாட்டத்துடன் என் தோள்சாய்ந்தால்..
குளிரும் தென்றலிலும் காய்ததுவே எங்கள் உடல்
இதுதான் நேரம் என்று என் காதோரம் அவள் ஊடல் மடல்
தீ பட்ட விரல்தனை வெடுக்கான விலக்கும் குழந்தையினை போல்
தீ மூட்டும் என் மூச்சு காற்றின் விவரம் அறிந்து விலகி சென்றாள்
விதி அறிந்த வீரன் நீ விளையாட்டின் முன் எனை உனதாக்கு
வீண் வாதம் வேண்டாம் என்றாள்
விழிநீருடன்,
விடியல் வரும் நம் வாழ்வில் விதியும் மாறுமென்று
அவள் விழிநீரை என் இதழ் பஞ்சால் துடைத்தனைதேன்
வெள்ளி நிலா வெளிச்சம் அது மண்ணில் வட்டமிட
வள்ளி அவள் நாணம் கொண்டு கொடி மலராய் மண்ணில் படர்ந்தாள்
தேனே! தெள்ளமுதே! என்றே அவள் இதழ்தேன் நான் பருக !
எங்கள் மோகம் கண்ட நிலாவது
வெட்கம் கொண்டு முகிலால் முகம் மூட
பனை உச்சில் பட்சி ரெண்டு பங்கை பேச கண்டேன்..
மார்கழி நிலஒளியில் பல பட்சி முன் இச்சை கொள்ளும்
மானிடர் ஒழுக்கம் என்பது இதுவன்றோ என்று பறைசாற்றி பறந்தனவே..
மனம் தெளிந்தேன் மங்கை அவளை மக்கள் முன் மணம் முடித்த பின்பே
மோகம் என்று மயக்கம் தெளித்தேன்
உமையாள் உச்சினோர்ந்து பல நூறு முத்தமிட்டு
பாங்கை பதில் உரைத்து பக்குவமாய் பிரிந்து சென்றேன்
உதயம் உதித்ததும் உமையாள் வாசல் வந்து முறையாய் பேசி முடித்து
பெற்றோர் ஊரார் முன் ஒருமணமாய் மனம் முடித்தோம்.
வெள்ளி நிலவு அது தேனிலவையானது இன்று
முன் மண்ணில் படர்ந்த நாங்கள்
இன்று மஞ்சத்தில் படர்ந்தோம்
மனமக்களாக,
இதுவே காதெலென்று…
-பாலா தமிழ் கடவுள்
No comments:
Post a Comment