இக்கரைக்கு அக்கரை பச்சை

மனதில் உள்ள இச்சைக்கு போடடா கச்சை
நீ வாழும் இடத்திலும் இருக்குமட பச்சை
வார்த்தையில் வைக்காத என்றும் கொச்சை
ஒருநாளது வெளிப்படுத்தும் உன்வாழ்வில் நச்சை

ஆசை எண்ணத்தின் பின்னே ஓடாதே
அது நடக்கவில்லை என்பதால் வாடாதே
அன்பில் கெட்டவர் சொல் நாடாதே
அது நம்வாழ்வில் நற்புகழ் பாடாதே

உனது வாழ்க்கையில் உள்ளதா திண்ணம்
என்பதை சோதிப்பது இறைவன் எண்ணம்
நல்லவனென்றால் நா தொடும் அண்ணம்
உன் வாழ்க்கையும் மாறும் பல வண்ணம்

உன் சிந்தனையில் தினமும் இறைவை
உன்வாழ்வு அடையும் விரைவில் நிறைவை
மதித்திடு நம் சுற்றத்தின் உறவை
மனம் அடையாது என்றும் பிரிவை

நல்லோரை படித்தால் நல்லது பிறக்கும்
பெற்றோரை பணிந்தால் நல்வாழ்வு சிறக்கும்
எளியோருக்கு உதவினால் இன்பமது நிறக்கும்
ஏழைமனம் கொண்டால் உன் அகவிழி திறக்கும்

இருக்குமிடத்தில் பிழைக்க தெரிவதில்லை
சென்ற இடத்திலும் மனமோ நிலைப்பதில்லை
எந்நாளும் இக்கரைக்கு அக்கரை பச்சையில்லை
மனம் போனபோக்கில் வாழ்ந்த வாழ்வு உச்சமில்லை...


-பாலா தமிழ் கடவுள்

No comments:

Post a Comment